×

வெள்ளக்கல் குப்பை கிடங்கு புகையால் பொதுமக்கள் அவதி

திருப்பரங்குன்றம், மே 10: திருப்பரங்குன்றம் அருகேயுள்ள வெள்ளக்கல் பகுதியில் மதுரை மாநகராட்சி குப்பை கிடங்கு சுமார் 100 ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு மதுரை மாநகராட்சி பகுதிகளில் சேமிக்கப்படும் குப்பைகள் கொட்டப்படுகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு இந்த குப்பை கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பல மணிநேர போராட்டத்திற்கு பின்னர் தீயணைப்பு படையினர் தீயை அனைத்தனர். குப்பைகளுக்கு அடியில் உள்ள நெருப்பு உட்புறமாக எரிவதால் தீ ஏற்படாமல் அதிகளவில் புகை வெளிவருகிறது.

இதிலிருந்து கிளம்பும் புகையானது அதனருகில் உள்ள பாம்பன் நகர், திருமலையூர், நிலையூர் திருப்பரங்குன்றம் ஆகிய பகுதிகளுக்கு பரவி வருகின்றது. அதிகளவில் புகை மூட்டமாக இருப்பதால் பகல் நேரத்திலேயே இப்பகுதியில் பணி படர்ந்தது போல காணப்படுகிறது. மேலும் இந்த புகையால் இப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் வயதானவர்கள், குழந்தைகள் மூச்சுதிணறலால் அவதியுறுகின்றனர். எனவே மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து குப்பை கிடங்கில் வெளிவரும் புகையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post வெள்ளக்கல் குப்பை கிடங்கு புகையால் பொதுமக்கள் அவதி appeared first on Dinakaran.

Tags : Vellakkal ,Tiruparangunram ,Madurai Municipal Corporation ,Vellakal ,Madurai Corporation ,Dinakaran ,
× RELATED வெள்ளக்கல் குப்பை கிடங்கில் பற்றியது தீ